காதலா ? காமமா ?
![]() |
பெண் இடை தொட்ட விரலும்
துடிக்க தான் செய்கிறது
*முதலிரவு பூக்கள் எல்லாம்
பொய்த்து போகின்றன காலையில்
அடி உன்னைத் தவிர !!
*அமாவாசையன்று வானம்
நிர்வானப் படுத்த பட்டதே
அடி உன்னை அங்கு
பொருத்தி பார்க்க தானோ ?
*என் நிழலில் நான்
ஒதுங்க முடிவதில்லை
அதனால் ஒதுங்கிக் கொள்கிறேன்
உன் நிழலில்
*உன் சாதியும் என் சாதியும்
அடித்து கொண்டு சாகட்டும்
இனி நீ தான் என் பொஞ்சாதி
*மாலை மாற்றும் வரை
தான் காத்திருந்தோமே
மாலை சாயும் வரையும்
காத்திருக்க சொல்கிறாயே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக