நேசமும் நேசிப்பும்
இது
நாளைய உன் வாழ்க்கைத்துணை
பிடிச்சிருக்கா புகைப்படம் காட்டி
உறவுகள்
பிடிச்சிருக்கா
உறவுகள் என்னிடத்தில் கேட்டதை
அவளிடம் திருப்பி கேட்டேன்
நான்
ம்ம்ம்
இதழ் விரியாத மூளல் ஓசையிலும்
தாழ்த்திய தலை அசைவிலும் அவசராமாய்
அரங்கேறியது திருமணம்
அறிமுகமில்லா
இரண்டு மனங்கள் சங்கமித்த
ஒற்றை உறக்கத்தின் முதல்
இராத்திரி
பிடிச்சிருக்கா
முன்நெற்றியில் முதல் முத்தம்
பதிக்கும்முன் மீண்டு கேட்டேன்
அழுத்தமாக
ம்ம்ம்
ஓசையற்ற மௌனச் சொல்லையே
மீண்டும் பதிலாக தந்தாள்
அவள்
பகலை இரவும்
இரவை பகலும் துரத்த
காலக் கல்லறைக்குள் இறந்துவிழுந்தப்டி
நாழிகைகள்
அன்று
சிறு கால இடைவெளிக்குப்பின்
ஒரு தனிமை உரையாடலின்
தருணம்
என்னை
எப்போது நீ விரும்பினாய்
ஒருசொல்லில் மெய் சொல்லென்றேன்
கள்ளச் சிரிப்பில்
ஒருசிறு
மௌனத்திற்குப் பின் இதழ் திறந்தாள்
இதுவரையிலான வாழ்க்கை நிகழ்வுகளை
வாசித்தவள்
ஒருநாளை
குறிப்பிட்டுச் சொல்லி சொன்னாள்
என்மேலான அவளின் முதல்
விருப்பத்தை
அதில்
மணவாழ்க்கையின் காலப்பழக்கம் இருந்தது
சொன்ன சொல்லில் உணர்ந்தேன்
மெய்யினை
அந்நாள்
வரையிலான என்மேலான
அவளின் விருப்பம் வெளிமனதின்
அபிநயங்கள்
நாம் நேசிப்பதும்
நம் துணையால் நேசிக்கப்படுவதும்
பிணைக்கப்பட்ட இல்லற உறவுகளின்
நல்புரிதல்
திருமண
பந்தத்தில் இணைந்துவிட்டோம்
நேசிப்பும் வாழ்கையும் கடமையாக நீளுகிறது
சில உறவுகளில்
இவ(ள்)ன்
நம் வாழ்க்கை பங்காளி
ஏன் நாம் அவர்களை நேசிக்கவேண்டும்
எத்தனையோ உறவுகள்
தலைவனை
தலைவியும் தலைவியை தலைவனும்
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் நல் இல்லறத்தின்
மாசற்ற அழகு
நாம்
நேசிப்போம் நம்மவர்களால்
நேசிக்கபடுவோம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக