மொத்தப் பக்கக்காட்சிகள்

திங்கள், 16 ஏப்ரல், 2012

உலகை புரட்டிப்போடும் புத்தகம்


உலகை புரட்டிப்போடும் புத்தகம் - ஒரு அறிமுகம்.2.நண்பனின் மதிப்புரை



இவன் எழுத்தின் மீது எனக்கு கொஞ்சமும் மரியாதை கிடையாது.இவன் எழுதுவது இலக்கியமே அல்ல.இவன் மற்றவர் பார்க்காத,படிக்காத  விசயங்களை ,மற்ற இலக்கிய நூற்களிலிருந்து திடுடி நயமாக தமிழில் கோர்த்து தனது எழுத்தாக,இலக்கியமாக ,உலகத்தரம் வாய்ந்ததாக காட்டிக்கொள்ளும் ஒரு மோசடிக்காரன்.இவன் மட்டுமல்ல இவனுக்கு இணையாகவும் சிலர் உள்ளனர்.

பாரதி பாடலை யார் பாடினாலும்,எழுதினாலும் இது பாரதியுடையது என்று சொல்லிவிட முடியும்.யாரேனும் உரிமை கொண்டாடினால் இது பாரதியினுடையது நீ போலி என அடித்துக்கூற முடியும்.ஆனால் ,மீலோ தீவில் பராகி மொழியில் கவிதை எழுதிய கோம்டபுரஜ் -ன்  கவிதையின் சூரிஸ் மொழிபெயர்ப்பின் ஆங்கில தழுவலை தமிழில் தனது என்றும்,கௌசிக பட்டரின் திதி சூக்தத்தை கொஞ்சம் பூசிமொழுகி மெழுகிட்டு தனது என்றும் வெளியிட்டால் யாருக்கு தெரியும் எங்கிருந்து திருடியது என்று.அதனால் தான் பாரதி பிற மொழி இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்க சொன்னான் போலும்.இத்தகைய இலக்கிய திடுட்டை தடுக்க.மொழிபெயர்க்க சொன்னா இங்க பெயரை பெயர்கிறானுக.

இத்தகைய இலக்கிய திருடர்கள் ,இவன்களுக்குள்ளே வேண்டுமென்றே,இந்த இலக்கிய திருட்டை மற்றவர்களிடமிருந்தும் தனது வாசகர்களிடமிருந்தும்  மறைக்க ஒரு போலிச்சண்டையை தங்களுக்குள் அறிவுலக யுத்தம் என்று கூறி தொடர்ந்து செய்துவருவதுடன்.தங்களுக்குள் நண்பர்களாகவும் ,வெளிப்பார்வைக்கு அறிவுலக வைரிகளாகவும் நடித்துவருவது தான் எனக்கு மிகவும் வேடிக்கையாக இருக்கிறது.

இன்றைய  தமிழ் இலக்கியம் இந்தகைய கயவர்களால் தான் சிரழிந்துவருகிறது.இவன் அதில் முதல் ரகம் அதனால் இவனை வாசிப்பது கிடையாது..... என புத்தகத்தை திறந்ததும் , நண்பனின் மதிப்புரை என்று தன்னைப்பற்றியும் தனது புத்தகத்தைப்பற்றியும் தனது நண்பன் எழுதியதை அப்படியே வெளியிட்ட எழுத்தாளனின் நாகரிகத்தையும் தைரியத்தையும் பார்த்து வியந்ததில்  தூக்கம் தொலைய,இயல்பின் போக்கில் வாசிக்க ஆரம்பித்து கடந்த மூன்று நாட்களாக புத்தகத்திலேயே
ஆழ்ந்துவிட்டிருந்துள்ளேன் என்பதனை ரவி உசிப்பியபொழுது தான்  இன்று மதியம் உணர்ந்தேன்.

எந்த புத்தகத்தையும் வாசித்தாலும் முழுமையாக வாசிப்பேன்,இல்லையேல் வாசிக்கவேமாட்டேன்.மற்றவர்போல் நாணல்தீண்டல் வாசிப்பு என்பது கிடையவேகிடையாது.ரவியும் அத்தகைய வகைதான்.தூக்கும் முன் முதன்முறையாக நாணல்தீண்டல் செய்யலாம் என்று தான் புத்தகத்தை எடுத்தேன்.ஆனால்,இதனை படிக்கப்படிக்க இதன் ஒவ்வொரு வரிகளும் என்னை புதுப்பித்துக்கொண்டே சென்றது.

என்னுள் இருந்த ஆயிரமாயிரம் கேள்விக்கு யாரும் கொடுக்காத மிகச்சிறந்த விளக்கத்தை என்னுள் விதைத்து  என்னை வேறு ஒரு தளத்திற்கு இட்டுச்சென்றது இப்புத்தகம்.

அவன் சிந்தித்துள்ளான்,எழுதியுள்ளான்  என்பதை விட அவன் என்னை சிந்திக்க வைத்தான் என்பதால் அவன் மீதான பார்வையும் விசாலமானது.நான் இப்பொழுது ஒரு புதிய உந்துசக்தியை பெற்றிருக்கிறேன்.இவ்வளவு சிறந்த புத்தகத்தை படைக்க அவன் எத்தகைய உன்னதமான அனுபவங்களை தனது வாழ்வில் பெற்றிருக்கவேண்டும் என வியப்பு மேலிட்டாலும் ,அதையும் தாண்டிய விழிப்புணர்வை இப்புத்தகம் அளிப்பதை உணர்கிறேன்.

உலகின் உண்மையை கடந்த தினங்களில்  உணர்வுப்பூர்வமாக இப்புத்தகத்தால் நான் அறிந்துகொண்டேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக