ஸ்ரீ ரங்கத்து தேவதைகள்
சுஜாதாவின் “ஸ்ரீ ரங்கத்து தேவதைகள்“ என்னும் சிறுகதை தொகுப்பை இப்பொழுது தான் படித்து(வாழ்ந்து) முடித்தேன். ”சுஜாதா இன்னும் இருபது வருடங்கள் வாழ்ந்திருக்க கூடாதா?” என்ற கேள்வியே எனக்குள் முதலில் எழுந்தது.சுஜாதாவை தமிழ் சமூகம் ரொம்பவே இழப்பில் தேடுகிறது.
“இந்த கதைகளின் நாயகன் நான் அல்ல” என்று முன்னுரையில் சொல்லும் சுஜாதா,கதை முழுக்க நம்மோடு அல்லது நாமாகவே வாழ்ந்து வருகிறார்.ஒரு சிறுவனின் வாழ்கையை நினைவு படுத்துவதில் நம்மை நம்முடைய பால்யத்திற்கும்,இளமைக்கும் அழைததுச் செல்கிறார்.கதை முழுக்க தன்னை கோழை என்று வர்ணித்தாலும் உண்மையான வீரன் இவன் தான் என்று சொல்லும் அளவு பயணிக்கிறார்
எத்தனை மனிதர்கள் !!!! கோவிந்து,ஆர்.விஜயராகவன்(ராவிரா),குண்டுரமணி,வி.ஜி.ஆர்,திண்ணா,பாலாமணி,வரதராஜன்,துரைசாமி,ஸ்ரீனிவாசன்,சிவராமன்,வத்ஸ்லா,பத்மநாப அய்யங்கார்,கிருஷ்ணமூர்த்தி,வீரராகவன்,மல்லிகா,செவளா,இவர்களோடு நம்ம நாயகன் ரங்கராஜன்
நிச்சயமாக ரங்கராஜன் மட்டுமல்ல கதையில் மேற்கூறிய எல்லோரும் நாயகர்கள்.நிஜத்தில் ரங்கராஜன் நாயகன்
சுஜாதாவின் சிறுகதைகளை படித்தால் நமக்கும் (முக்கியமாக எனக்கு) ஒரு சிறுகதையோ,கதையோ எழுதத்தூண்டும்,சச்சின் விளையாடுவதை பார்த்தால் உலகின் உன்னதமான விளையாட்டு கிரிக்கெட் என்னும் முடிவிற்கு வருவது போல
சுஜாதா ஒரு சிற்பி ; கதாபாத்திரங்களை அப்படித்தான் செதுக்கி இருக்கிறார்
சுஜாதா ஒரு ஓவியன்; காட்சிகளை அப்படித்தான் எழுத்தில் வர்ணித்து நம் மனதில் வரைகிறார்
சுஜாதா ஒரு கதாசிரியன் ; மனிதருள் மாணிக்கம்
இந்த புத்தகத்தை பாடவேளையில் மேசைக்கு அடியில் மறைத்து வைத்து தான் படித்தேன் .மூன்றே பாடவேளையில் முடித்து விட்டேன்.இதற்கு நடுவில் ஒரு ஆசிரியர் தேர்வு முடிவுகளை அறிவித்தார் என்பதை கிஷோரி சொல்லி தான் தெரிந்து கொண்டேன்.
ஒரே கேள்வி என்னவென்றால் ......இப்ப நான் மதுரைக்காரனா?
ஸ்ரீரங்கத்து காரனா?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக